"
ஒரு நிகழ்வு திருநங்கைகளைப் பற்றியது. ஏனோ இங்கு எனதருமை அண்ணன் @prabin raj நினைவுக்கு வருகிறார். நான் முன்பு ஒரு முறை திருநங்கைகளை முறைகேடாக நடத்துகின்றனர் என்று கருத்துப் பதிவு செய்தபோது அவர் சொன்னது அவர்களின் இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்றார். அது உண்மை என்பது போல் இருந்தது காலையில் நான் கண்ட காட்சி. இரயில் பெட்டியில் ஏறி அனைவரிடத்திலும் பிச்சைக் கேட்டார் அதில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவனும் அடக்கம். ஒரு சிறு பிள்ளையிடம் கேட்கிறோம் என்ற வெட்கம் சிறிதுமின்றி அவர் கேட்டவிதம் மனதை பாதித்தது. இதில் விசேஷம் என்னவெனில் அந்த சிறு பயன் என்னிடமே நான் மனதில் நினைத்ததைக் கூறினான் "அக்கா நான் சின்ன பயந்தானே என்கிட்டபோய் பிச்சை கேட்கிறார்கள்". @prabin raj அண்ணே நான் உங்களின் கூற்றை ஒத்துக்கொள்கிறேன். இன்னொரு நிகழ்வு, வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றியது. பாவம் அவ்வளவு காலையில் எழுந்து தலைகூட வாராமல், காலை உணவுகூட வீட்டில் அமர்ந்து சாவகசமாக உண்ணக்கூட முடியாமல் அப்படி யாருக்காக உழைக்கிறார்கள்.அவர்களின் குடும்பதிற்காகவெனில் கணவன்மார்களே கொஞ்சம் அவர்களை விசேஷமாக கவனியுங்கள். விசேஷமாக என்றால் உடனே கேள்வி கேட்காதீர்கள் உங்கள் அன்பான வார்த்தைகள் ஒன்றே போதுமானது. |
ஒரு சில திருநங்கைகள் செய்யும் செயல்களால் அவர்கள் அனைவருமே பாதிக்கப் படுகிறார்கள்
பதிலளிநீக்குunmaithaan
பதிலளிநீக்குவந்து பாத்துட்டேன்... :)
பதிலளிநீக்குsyed babu
நீக்கு