புதன், 13 பிப்ரவரி, 2013

காதல் செய்ய வாரீர்

உன் கடைக்கண் பார்வை பட்டுத் தெரித்திட
என் மனம் வண்ண வண்ண உடைகள்தனை
உடுத்திக்கொள்ள விழைகின்றதே!!
நீர் வரும் செய்தி அறிந்திட
மனம் விழைகின்றதே!!
நீர் வரும் நேரத்தில் நம்மையன்றி
வேறு யாருமில்லா நிமிடங்களை
மனம் நாடுகின்றதே!!
நீர் வந்த செய்தி அறிந்து உம்மை
எண்ணிலடங்கா ஆசையுடன்
மனம் முழுதும் நிரப்பி
என்னவன் ஆக்கிட
எனதுள்ளம் துடிகின்றதே!!
இதை நீரும் அறிவீரோ?
என் மன்னவரே!!!

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பெண்மை

"
அந்தி நேரத்தில்
மழைச்சாரலுடன்
ஒரு இனிய இரயில்
பயணம்
சில்லென்ற காற்று
அம்மா அம்மா குளிர்கிறது
என்கிறது ஒரு குரல்,
குறு குறு பார்வைகள்
என் துப்பட்டாவை நோக்கி
என் செய்வேனோ
பெண்மையும் தாய்மையும்
ஒரு சேர மோதிக்கொள்கின்றதே...
"

போராளி


"வாழ்வில்
போராடி தோற்றுப்பார்
உன்னை ஜெயிதவனும்கூட
உன்னை விரும்புவான்"

கர்வம்


"சிறகுகள் முளைந்த சந்தோஷத்தில்
சிட்டுகுருவியாய் பறந்தேனே
சீக்கிரமே வீழ்ந்தேனே
பிறகுதான் தெரிந்தது
முளைந்தது சிறகுகள் அல்ல
என் கர்வம் என்று"

வலி

"வலி.. வலி..
வலி மட்டுமே..
என் வாழ்வில்
எதற்காம்?
ஒளிப்பதற்கு!
(ஜொலிப்பதற்கு)"

அன்பு


"உன் பணமும் வேண்டாம்
உன் பகட்டும் வேண்டாம்
உன் ஆள் பலமும் வேண்டாம்
நீ பணக்காரனாகவே இருந்தாலும் கூட
உன் அன்பு மட்டும் போதும்"

உயிர்


"வாய் பேசவில்லை
கண்கள் பேசவில்லை
கைகளும் பேசவில்லை
உனக்காக
என் உயிர் மட்டும்
துடித்துகொண்டிருக்கிறது"

கல்யாணம்

தலை வாரிப் பூச்சூடி
பட்டுடுத்திப் புது சேலை கட்டி
பொன் நகைகள் பூட்டி
கொளு பொம்மையாய்
காத்து நின்றேனே
உன்னுடன் என்
வாழ்க்கைப் பயணத்தை
தொடர்ந்திட...

முகம்

"என் முகம்
அறிந்த பலர்
என் அகம்
அறியாமல்
என் பக்கத்தில்..."

பொய்


"பொய்யிலே புலர்ந்து
பொய்யிலே வளர்ந்து
போய்யினாலான உலகத்திலே
உண்மையாய் வாழ்ந்திடலாகுமோ!
அப்படி வாழ்ந்திட்டாலும்
உன்னை இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளுமா?"

மாட்டுப்பெண்

"
அன்பென்ற ஆயுதமேந்தி
ஆசையென்னும் அணிகலன் பூட்டி
இல்லறமெனும் கடலில் மூழ்க
ஈகை எனும் அரண் அறிந்து
உவகை எனும் உணர்வறிந்து
ஊலல்லா பாடி மகிழ
எட்டு திசையிலிருந்தும் வாழ்த்திட
ஏற்றம் பல வாழ்வில் பெற்றிட
ஐயமிலா வாழ்வு நிலைத்திட
ஒற்றுமையும் வேற்றுமையும் அறிந்திட
ஓசையுடன் பாட்டுப்பாடி
வரவேற்போம் நம் வீட்டுப் பெண்ணை
ஆம் நம் வீட்டுப் பெண்!
"

தனிமை

"நீ அருகில்
இல்லாது போனாலும்
என் தனிமையை
நான் உணர்ந்ததில்லை
ஏனெனில்
என் இதயத்தில் நீ!"

வெட்கம்


"கண்ணாடியில்
தெளிவாய் தெரிகிறது
என் வெட்கம்
உன்னிடத்தில்
என் காதலை
சொன்ன வினாடியில்.."

உள்ளம்


"
உள்ளத்துள்ளல் உயருள்ளல்
இல்லத்து வாரின்
துயருள்ளலாமே!
இவ்வுலகினில் வந்துதிக்கும்
அனைத்து உயிர்களுமே
உள்ளத்துள்ளல் உயருள்ளல்!
ஆனால் அதன் உயிர்ப் போகுமுன்
அது படும் பாடு துயருள்ளலே!
இத்துயர் போக்கிடவே,
நம் குலம் வாழ்ந்திடவே,
பெரியோர்கள் பலர்
உயருள்ளளோடு வகுத்திட்ட
வழியினை பின் பற்றிடல்
உத்தமமே!
நீதி நெறி தவறாமை
பொய் புறம் கூறாமை
அடுத்தவர் குடி கெடுக்காமை
இன்னும் பிற நல்லனவையை
சிற்றரிவைத் தள்ளி வைத்து பின்பற்றிட
உள்ளத்துள்ளல் உயருள்ளலாமே!
"

அன்பு

"
கண் காண தேசத்திலிருந்தாலும்,
கண் முன் இருந்தாலும் ஒன்றுதான்.
அள்ளி அள்ளி எதையும் எதிர்பாராது,
அள்ள அள்ள குறையாது,
அமுதசுரபி பாத்திரத்தை போன்று
திகட்ட, திகட்ட
திரும்பத் திரும்ப
சுவைக்க, சுவைக்க
பிறருக்குத் தருவதுதான்
அன்பு!!!
பிறரிடம் எதிர்ப்பார்ப்பதல்ல.
"

பெண்


"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துகொண்டால் கண்களை மீன்களுக்கும், முகத்தை நிலவுக்கும்
இன்னும் பிற உடலுறுப்புக்களை நன் முறையில் உருவகப்படுத்தி எழுதும் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் தவறாக எழுதிவிட்டார்களா என்ன?

பெண்ணை பூமித்தாய்க்கு நிகராக குறிப்பிட்டதை தவறாக
எண்ணி அப்பெண்ணுக்கு என்ன செய்தாலும் தாங்கிக்கொள்வாள் அல்லது ஏற்றுகொள்வாள் என்று நினைத்துவிட்டார்களா இந்த கயவர்கள்.

பெண்ணின் உடலை மிருகங்கள் தினம் தினம் அடித்து கொன்று தின்கின்றதே! என் செய்வேன் நானும் இப்பெண் இனத்தின் ஒரு உறுப்பினராக?"

சரியா? தவறா?


"
உனக்கு சரி என்பது எனக்கு தவறு.
எனக்கு சரி என்பது உனக்கு தவறு.
அதற்காக உனக்கு சரி என்று பட்டதை
நான் சரி என்று கூற இயலாது.
எனக்கு சரி என்று பட்டதை நீ சரி
என்று கூறவேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது
இப்ப சொல்லுங்க சரி என்பது சரியா?
தவறு என்பது தவறா?
சரி என்பது தவறு எனின் சரி என்பது என்ன?
தவறு என்பது சரி எனின் தவறு என்பது என்ன?
அப்ப சரின்னா என்ன? தவறுன்னா என்ன?
"

நட்பு


"குறுகுறுப் பார்வையுநூடேயுள்ள
முழு உடையும் முழு நிர்வாணமே எனில்
பொய்யுடன் கூடிய நட்பு?"

நம்பிக்கை

"
தனியே தன்னந்தனியே
அமர்திருக்கும்போதினிலே
உயிர்ப் பிரிதல் புலப்பட்டு
உன் கண்களில் பயத்தை
தெரிக்கின்றதே! அது ஏன்?
உன்னுள் உனக்கே தெரியாமல்
தூங்கிகொண்டிருக்கும்
உன் தன்னம்பிக்கையை
கொஞ்சம் தட்டி எழுப்பிப்
பாரடா! உன் உயிர் பிரிதல்
துச்சமென்றே ஆகிவிடுமடா!!
"

காதல்

"கருவாய் அருவாய் நிறைவாய்
வருமிந்தக் காதல்!
அதனின்று வெருரொன்றுமில்லை
என்றே மாய வலையினில் புதைத்து
உன்னை நித்தமும் கொன்றே செல்லுமே
இந்தக் காதல்!!"

மனதில் பதிந்த காட்சிகள்


"
இனிய மாலை வணக்கம் நண்பர்களே. இரண்டு நாட்களாக மின்சார இரயிலில் பயணிக்கும்போது கண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு நிகழ்வு திருநங்கைகளைப் பற்றியது. ஏனோ இங்கு எனதருமை அண்ணன் @prabin raj நினைவுக்கு வருகிறார். நான் முன்பு ஒரு முறை திருநங்கைகளை முறைகேடாக நடத்துகின்றனர் என்று கருத்துப் பதிவு செய்தபோது அவர் சொன்னது அவர்களின் இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்றார். அது உண்மை என்பது போல் இருந்தது காலையில் நான் கண்ட காட்சி. இரயில் பெட்டியில் ஏறி அனைவரிடத்திலும் பிச்சைக் கேட்டார் அதில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவனும் அடக்கம். ஒரு சிறு பிள்ளையிடம் கேட்கிறோம் என்ற வெட்கம் சிறிதுமின்றி அவர் கேட்டவிதம் மனதை பாதித்தது. இதில் விசேஷம் என்னவெனில் அந்த சிறு பயன் என்னிடமே நான் மனதில் நினைத்ததைக் கூறினான் "அக்கா நான் சின்ன பயந்தானே என்கிட்டபோய் பிச்சை கேட்கிறார்கள்". @prabin raj அண்ணே நான் உங்களின் கூற்றை ஒத்துக்கொள்கிறேன்.

இன்னொரு நிகழ்வு, வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றியது. பாவம் அவ்வளவு காலையில் எழுந்து தலைகூட வாராமல், காலை உணவுகூட வீட்டில் அமர்ந்து சாவகசமாக உண்ணக்கூட முடியாமல் அப்படி யாருக்காக உழைக்கிறார்கள்.அவர்களின் குடும்பதிற்காகவெனில் கணவன்மார்களே கொஞ்சம் அவர்களை விசேஷமாக கவனியுங்கள். விசேஷமாக என்றால் உடனே கேள்வி கேட்காதீர்கள் உங்கள் அன்பான வார்த்தைகள் ஒன்றே போதுமானது.
"

பற்று

"
என்ன கொடுமையடா!
இந்த மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு உயிருக்கும்,
உறவுக்கும் உறவுப்பாலமாய்
இருத்தலினால் உருவாகும்
பந்தத்தில் சிக்குண்டுக்
கிடப்பதுவும், தவிப்பதுவும்!!
பற்றற்ற நிலையை நோக்கியப்
பயணங்கள் இடையினில்
தடைபடுவதுவும், மறைந்திடலும்!!
என்று முடியும் எம் பயணம்
என்று முடியும் எம் பயணம்
என்றே நித்தமும் நினைந்திட்டே
எம் பயணங்கள் தொடர்கிறதே
பற்றுதலுடனே பற்றுதலற்ற நிலைக்கு!!!
பயணம் முடிவதெப்போது
என்று தெரியாமலே பணிப்பதுவும்கூட
பற்றுதலன்றி வேறேது!!!
இந்த பற்றுதலினூடெ பயனிப்பதுவும்
எமக்கு பற்றுதலே!!!
"

வாழ்க்கை

இரவு முடிந்து
விடியலை நோக்கிய
நம் பயணம் வாழ்வின்
துவக்கமா? முடிவா?
வாழ்வின் துவக்கமெனில்
அவ்வாழ்வின் இனிமையை
மற்றவர்களுக்கு சேர்த்திடு!
வாழ்வின் முடிவெனில்
வாழ்ந்த வாழ்க்கையில்
மற்றவர்களுக்கு என் செய்தாய்?
அதை நினைந்துகொண்டே
வாழ்வின் முடிவை ஏற்றுக்கொள்!!
"

உழவன்



"நமக்கு உணவளிப்பதாலேயே
உழவனை நாம் தாயாக்கினோம்!
அவ்வுழவனை தினம் தினம்
பிளாட் போட்டு விற்று
முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது
எவ்விதத்தில் நியாயம்!!"