செவ்வாய், 1 அக்டோபர், 2013

பிரிதொரு முறை
வருவேனென
சொல்லிவிட்டு
சென்றது,
மாலையில்
என் வீடு வந்த
முற்றத்து நிலா!!
நேற்றைய
சிறுமியின்
கைகள்
அறிந்திருக்கவில்லை,
தான் பிடித்திருக்கும்
இன்றைய
சாணக் கரைசல்
பக்கெட்,
நாளை
கணினியின்
எலியாகுமென்று!!
மனிதம்
செத்து
மனிதர்
முழித்திருக்க
அருமையான
சமூகம்
உன்னில்
என்னைக்
கண்ட
நாள்
முதல்
நானும்
உன்னுடையதாய்!!
வாழ்வினில்
சூது கவ்வும்
எப்போழுதுமல்ல!
மனிதா,
விழித்திரு
எப்போதும்!!
உன்னை
நீ அறிய
முயன்றால்
அந்த முயற்சிக்கே
இவ்வுலகம்
உன்னை
நினைந்திடும்
இதமானதொரு
மாலைப் பொழுதினிலே
அசைந்தாடிய
இலைகளும் கொடிகளுமே
சாட்சியாய் இருந்திட
ரம்யமானதொரு
ராகம் எங்கிருந்தோ
மெட்டெடுத்து
காற்றினில் மெல்ல
மிதந்து வந்திட
உன் மடியினில்
என் தலை
வைத்துரங்குவதுபோல்
பாவித்துக் கிடக்க
அட
என் இனிய
கனவு கலைந்தே
கலைந்து போயிற்றே
சொல்லத்தான்
நினைத்தேன்
கவிதை!
உன் முகம்
பார்த்த
நொடியில்
வார்த்தையின்றி
நின்றேன்!
உனக்கானது
உனக்கானதாய்
சர்வ நிச்சயமாய்
இங்குண்டு
உன் சுவாசம்!
இங்கில்லையெனில்
வேறு எங்கேனும்
சர்வ நிச்சயமாய்!!
இடமொன்று
வலமொன்றாய்
தனித்தனி
வழி செல்லும்
இரட்டை மாட்டு
வண்டியை
நேரே இழுத்துச்
செல்லும்
வண்டிக்காரனாய்
வாழ்க்கை!!
உன்னைப் பிரிய
மனமிலாது!
ஆனாலும்
இது தற்காலிக
பிரிவுதானே
கண்ணே!!
கலங்காதிரு
மீண்டும்
வருவேன்
உன்னை
புசிக்க,
புரட்டாசி
முடிவில்!!!
ஒவ்வொரு
முறையும்
தயக்கத்துடனே
உன் கதவை
திறக்க
எத்தனித்திருந்தேன்
ஏன்
சில பல சமயங்களில்
திறக்காமலேயே
இருந்துமிருந்தேன்
இப்போதோ
நீ வேண்டவே
வேண்டாமென
புறந்தள்ளியும்
இருக்கும்
கலையைத்
தெரிந்தும்
கொண்டேன்
இப்பொழுதும்
எப்பொழுதும்
ஏன்
முக்காலுமே
நீ நானாக
நான் நீயாக
வேண்டுமென
இனி
ஒருபோதும்
நினையேன்
எனில்,
என் நிலை?
உன்னுள்ளே
நான்
எப்போதும்
உண்டு
எட்டாக்
கனியாய்,
அணையா
விளக்காய்
சுவைக்க
நினைந்திடும்
கனியாய்
உன் நிலை
உனக்குப்
புரிந்திட்டால்
புலப்படும்
பின்
மனமும்
அறிவும்
ஒன்றாகும்
நினைவே
நான் சற்றே
என்னை பின்னோக்கி
கொண்டுசெல்ல
நினைக்கிறேன்!
நீயும் சற்றே
முன்னோக்கி
வருவாயா!!
நாம்
இருவரும்
சங்கமித்து
இனிவரும்
நிகழ்வுகளுக்கு
ஒரு சகாப்தம்
படைப்போம்!!!
எனை நானும்
உருமாற்றிக்கொள்ளும்
தவத்தைக்
கேட்டேன்!
கிடைத்தது
தினமொரு
உருவம்
முதலில் மகளாக
என் பெற்றோர்களுக்கு,
தமக்கையாக
என் உடன்பிறந்தோருக்கு,
உனக்கு மனைவியாக,
என் குழந்தைகளுக்கு
தாயாக, இருந்தும்
இன்னமும்
நான்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றேன்
உருமாற்றிக்கொள்ளும்
தவத்தை.
நான் கேட்ட உருவம்
இன்னும்
கிட்டியபாடுதான் இல்லை
என்னை படைத்த
உனக்குமா
தெரியவில்லை
நான் கேட்டது
உன்னிடம்
அருவமாய்
உன்னருகில்
இருக்க கேட்டேனென்று