வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மகள் (ன்)

வாராதெனின்
யாதொரு
வலியுமின்றி
வரவழைக்கும்
தந்திர
வித்தையைக்
கற்றவள்(ன்)

மௌனம்

என்னை
நீ மறந்தாலும்
என் மொழிகளை
மறவாதிருக்க
என்னுள்ளே
மௌனத்தை
மொழியாக்கி
எழுதி வைத்தேன்
நானும், நீயும்
ஒன்றல்லவா!!

இசை

மௌனம்
உன் மொழியெனில்
அந்த மௌனம்கூட
இசைதான்!

தொலைதல்

உனக்கான
தருணங்களில்
என்னை நானே
தொலைத்திட
அறிந்துகொண்டேன்!!

ஆசை

உன்னைக்
காணும்
கண நேரம்
நானும்
குழந்தையாய்
மாறிட ஆசை!!

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

போக்குவரத்துச் சுட்டுக்குறி

உன்னை நானும்
என்னை நீயும்
முந்தும்
முயற்சியில்
நம் இருவரையும்
முந்தியதேன்னவோ
சிகப்பு விளக்கு!

மனமும் கழிவறையும்

உன்னைச்
சுத்தப்படுத்தும்
முயற்சியில்
உன்னை வென்று
என் மனதை
வென்றிட்டேனா
என்றரியாமல்
நானும்
இறுமாந்திருந்தேன்
உன்னை
சுத்தமாக்கி
விட்டேனென்று!!

பயம்

தினம் தினம்
பிணந்தின்னிக்
கழுகுகளாகவும்,
மிகக்கொடிய
விஷங்கொண்ட
பாம்புகளாகவும்
உருமாறிக்கொண்டிருக்கும்
மனிதர்களைப் பார்த்துப்
பழகிக்கொள்ள முயற்சிக்கும்
இந்நேரத்தில்
உன்னை நிஜத்தில்
கண்டபொழுதும்
பயமற்றுப்போனேன்!

வெளுப்பு

வெளு வெளுவென்று
வெளுக்கத்தான்
நினைக்கிறேன்
உன் உடைகளை!
அல்ல,
உன் மனதினை!

பெண் பிள்ளை

ஜனனத்தின்போது
என்னுயிர்ப்
பறிக்க
நீ குடுக்க
யத்தனித்த
நெல்மணிகளை
இப்போது
பட்டினி
மரணத்தின்போது
கேட்கிறேன்
குடுப்பாயா
உயிரோடிருக்க!

சுவாசம்

இசையினும்
இனிய
மெல்லிய
சுவாசத்தின்
சத்தமின்றி
கழியும்
நாட்களை
எண்ணி
இன்றே
முழுவதுமாய்
சுவாசிக்கிறேன்!!

வெங்காயம்

மெல்ல
இனி
நானழுவதை
நிறுத்திக்
கொள்வேன்
உன்
விலையைக்
கேட்டு!

காதலா

என்
உலகமே
நீயேன்றிருந்தேன்!
நீயோ
உன் மொழிகளே
எனக்குப்
புரியவில்லை
என்றொரு
சொல்லில்
வேற்று
கிரகவாசியானாய்!

அம்மா

யாருமில்லாது
போனாலும்
எதுவுமில்லாது
போனாலும்
கணவனே
(காதலனே)
போனாலும்
என்
பிள்ளைகளை
நான்
விடேன்!
அப்படி
நேரும்
நொடியில்
என்
பிள்ளைகள்
நலன்
முன்னோக்கி
இருந்திருக்கும்!!

நம்பிக்கை

ஊர்
எல்லையில்
ஓர்
வெளிச்சப் புள்ளி
என்னை
நான்
முழுதும்
உணர்ந்தபொழுது!

வரவேற்பு

வரவேற்பறை 
 என்
இரு கை
கரம் கூப்பி
வணங்கிடவே
நினைத்துன்னை
ஏறிட்டேன்!
நீயோ
என்
ஒரு கையே
போதுமென்றாய்
உன் கன்னத்தைப்
பதம் பார்க்க!!

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

காதல்

உன்
மெல்லிய
இசையினும்
இனிய
சுவாசத்தின்
சத்தமின்றி
கழியுதெந்தன்
நாட்கள்!