செவ்வாய், 26 மார்ச், 2013

உண்மை

பொய்மையிநூடே புழங்கும் உண்மையும் பொய்மையாகுமே!
என் செய்ய?
இவ்வுலகம் பொய்மையில் கரைந்துள்ளதே!!
இவ்வுலகமே பொய்மை எனில்,
உண்மை இங்குண்டோ?
அவ்வுண்மை எடுபடுமோ?
மானிடா உன் தலை நிமிர்ந்திட 
உண்மையை உயிர்தெழச்செய்யடா.

கலங்காதிரு மனமே

வாழ்க்கையில் தோல்வி எனில் 
உன்னில் புரட்சி வெடித்து
புரட்சி கவிதைகள் வெடிக்கும்!
காதல் தோல்வி எனில் 
உன்னில் சோக கீதங்கள்!!
காதல் வெற்றி எனில்
உன்னில் பூ பூத்து,
காதல் கவிதைகளாகும்!
நட்பு மலர்ந்தால் 
உன்னில் நட்பின் மணம் வீசும்!!
எதற்கும் கலங்காதிரு மனமே
அனைத்தும் கடந்து போகும்
நீ நீயாக இருக்கும் வரை!!

கலங்காதிரு மனமே

வாழ்க்கையில் தோல்வி எனில் 
உன்னில் புரட்சி வெடித்து
புரட்சி கவிதைகள் வெடிக்கும்!
காதல் தோல்வி எனில் 
உன்னில் சோக கீதங்கள்!!
காதல் வெற்றி எனில்
உன்னில் பூ பூத்து,
காதல் கவிதைகளாகும்!
நட்பு மலர்ந்தால் 
உன்னில் நட்பின் மணம் வீசும்!!
எதற்கும் கலங்காதிரு மனமே
அனைத்தும் கடந்து போகும்
நீ நீயாக இருக்கும் வரை!!

Kaathal

மல்லிகைப்பூவின் வாசம் வீசுதடி
மெல்லிய சருகாய் ஆன
உந்தன் மனமும் பேசுதடி 
அப்பேச்சினிடையே உந்தன் 
வெட்கப் புன்னகை எட்டிப் பார்த்து
உந்தன் காதலை என்னிடத்தில் 
கூறிட துடித்ததடி!
உன்னிலையை என்னிடத்தில்
இலைமறை காய்மறையாய் 
நீ கூறுமுன்போ, என் இதயத்தை 
ஓராயிரம் அணுக்கள் வைத்து
தகர்க்கத் துடிக்கும் பீரங்கியாய்
உன்னை நானும் நினைத்தேனடி!!

வாழ்க்கை !!!

வாழ்க்கை !!!

வாழ்வின் சுழற்சியிநூடே 
சுழலத் தெரிந்தவன்
சம்சாரி ஆகிறான்!
வாழ்வின் சுழற்சியின்
வேகத்துக்கு பயந்தவன்
சந்நியாசி ஆகிறான்!!
வாழ்வின் சுழற்சியை
எதிர்த்து நிற்பவன்
போராளி ஆகிறான்!
வாழ்வின் சுழற்சியை
தன கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்
சித்தன் ஆகிறான்!